• Nov 26 2024

தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பம்...! நாமலுக்கு கிடைக்கவுள்ள முக்கிய பதவி...!

Sharmi / Mar 11th 2024, 9:10 am
image

நாமல் ராஜபக்ச விரைவில் எதிர்கட்சி தலைவராக பதவியேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் சித்திரை மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், பசில் ராஜபக்ஷவின் நடவடிக்கையின் அடிப்படையில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க் கட்சிக்கு செல்லவுள்ளது.

அத்துடன், நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்புள்ளது.

மேலும், ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாஸவை இணைக்கும் நடவடிக்கை ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. 

இதனடிப்படையில், சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியினர், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பம். நாமலுக்கு கிடைக்கவுள்ள முக்கிய பதவி. நாமல் ராஜபக்ச விரைவில் எதிர்கட்சி தலைவராக பதவியேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் சித்திரை மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதனடிப்படையில், பசில் ராஜபக்ஷவின் நடவடிக்கையின் அடிப்படையில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க் கட்சிக்கு செல்லவுள்ளது.அத்துடன், நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்புள்ளது.மேலும், ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாஸவை இணைக்கும் நடவடிக்கை ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியினர், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement