• Jul 13 2025

சைக்கிளில் ஏற முற்பட்டவரை அடித்துத் தள்ளிய ஹயேஸ் - மகளின் 9A சித்தி மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்திற்கு விழுந்த பெரும் சோகம்!

shanuja / Jul 12th 2025, 11:19 pm
image

சைக்கிளில் வீதியைக் கடக்க  முற்பட்ட நபரொருவரை, ஹயேஸ் மோதித் தள்ளியதில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்றுள்ளது. 

 

விபத்தில் நயினாதீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் கோண்டாவில் டிப்போவில் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வருகின்றார். நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இவர் கோண்டாவில் பகுதியில், பணி நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.


இந்நிலையில் இன்று மதிய உணவுக்காக  சைக்கிளில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தார். கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த  ஹயேஸ்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர்  மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. 


விபத்தில்  படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 



இதற்கிடையே  உயிரிழந்தவரின்  இரண்டு  பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் நேற்று வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளார். 


மகளின் பெறுபேறுகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடவிருந்த குடும்பத்தினர் மத்தியில் அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிளில் ஏற முற்பட்டவரை அடித்துத் தள்ளிய ஹயேஸ் - மகளின் 9A சித்தி மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்திற்கு விழுந்த பெரும் சோகம் சைக்கிளில் வீதியைக் கடக்க  முற்பட்ட நபரொருவரை, ஹயேஸ் மோதித் தள்ளியதில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்றுள்ளது.  விபத்தில் நயினாதீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கோண்டாவில் டிப்போவில் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வருகின்றார். நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இவர் கோண்டாவில் பகுதியில், பணி நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.இந்நிலையில் இன்று மதிய உணவுக்காக  சைக்கிளில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தார். கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த  ஹயேஸ்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர்  மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில்  படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே  உயிரிழந்தவரின்  இரண்டு  பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் நேற்று வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளார். மகளின் பெறுபேறுகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடவிருந்த குடும்பத்தினர் மத்தியில் அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement