எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து பொதுவேட்பாளரை களமிறக்குவதோ, அல்லது தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதோ நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயலாகவே அமையும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய அரசியல் கூட்டணியையும்,
இன, மத, மொழி வாதற்ற வேட்பாளரையும் அடையாளம் கண்டு அதில் பங்கேற்பதே சிறந்த அரசியல் சாணக்கியமான நடவடிக்கையாக அமையும்.
அவ்வாறு இல்லாது விட்டால் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயற்பாடாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடக்கு, கிழக்கு தமது பூர்வீகமான பிரதேசம் என்ற நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது பிரதேசத்தினை மையப்படுத்தியதாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கோ அல்லது தேர்தலை மக்களின் ஆதரவுடன் புறக்கணிப்பதற்கோ முழுமையான உரித்தினைக் கொண்டிருக்கின்றன.
ஆனால், யதார்த்த நிலைமைகளைப் பற்றி அக்கட்சிகள் சிந்திப்பது தான் மிகவும் அவசியமானதாகின்றது. வடக்கு, கிழக்கினை மையப்படுத்திய பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அந்த வேட்பாளருக்கு வெறுமனே அப்பகுதிகளில் தான் ஆதரவு கிடைக்கும்.
வடக்கு,கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழ் மக்கள் ஆதரவளிக்காத நிலைமையொன்று ஏற்படுவதற்கே அதிகமான சாத்தியப்பாடுகள் உள்ளன.
மறுபக்கத்தில், தமிழ் கட்சிகளின் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை.
அவ்வாறு பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டதன் பின்னர் தேசிய கட்சிகளின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றால் அதன் பின்னர் அசௌகரியத்துக்குள் உள்ளாகப்போவதும் தமிழ் மக்கள் தான்.
ஆகவே அதுபற்றியும் தமிழ்க் கட்சிகள் கரிசனைகளைக் கொள்வதே பொருத்தமானது. என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெறப்போவதில்லை. தமிழ் கட்சிகளுக்கு அமைச்சர் வழங்கிய அட்வைஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து பொதுவேட்பாளரை களமிறக்குவதோ, அல்லது தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதோ நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயலாகவே அமையும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.அத்துடன், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய அரசியல் கூட்டணியையும், இன, மத, மொழி வாதற்ற வேட்பாளரையும் அடையாளம் கண்டு அதில் பங்கேற்பதே சிறந்த அரசியல் சாணக்கியமான நடவடிக்கையாக அமையும். அவ்வாறு இல்லாது விட்டால் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயற்பாடாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், வடக்கு, கிழக்கு தமது பூர்வீகமான பிரதேசம் என்ற நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது பிரதேசத்தினை மையப்படுத்தியதாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கோ அல்லது தேர்தலை மக்களின் ஆதரவுடன் புறக்கணிப்பதற்கோ முழுமையான உரித்தினைக் கொண்டிருக்கின்றன. ஆனால், யதார்த்த நிலைமைகளைப் பற்றி அக்கட்சிகள் சிந்திப்பது தான் மிகவும் அவசியமானதாகின்றது. வடக்கு, கிழக்கினை மையப்படுத்திய பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அந்த வேட்பாளருக்கு வெறுமனே அப்பகுதிகளில் தான் ஆதரவு கிடைக்கும். வடக்கு,கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழ் மக்கள் ஆதரவளிக்காத நிலைமையொன்று ஏற்படுவதற்கே அதிகமான சாத்தியப்பாடுகள் உள்ளன. மறுபக்கத்தில், தமிழ் கட்சிகளின் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை. அவ்வாறு பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டதன் பின்னர் தேசிய கட்சிகளின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றால் அதன் பின்னர் அசௌகரியத்துக்குள் உள்ளாகப்போவதும் தமிழ் மக்கள் தான். ஆகவே அதுபற்றியும் தமிழ்க் கட்சிகள் கரிசனைகளைக் கொள்வதே பொருத்தமானது. என்றார்.