• Oct 18 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு கல்லடி அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக அஞ்சலி!samugammedia

Sharmi / Apr 21st 2023, 11:14 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை கல்லடி அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மட்டு வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 31 பேர்களது புகைப்படம் தாங்கிய பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அவர்களது ஆத்மா சாந்தி வேண்டியும் அன்றைய தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளினதும் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்தனை நிகழ்த்தப்பட்;டு மலர் தூவி ஈகைச் சுடர் ஏற்றி நினைவேந்தல் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஞா.சுகுணன்.உயிர் நீத்தவர்களின் உறவுகளின சார்பில் அ.வேள் மற்றும் சமூக பற்றாளர் கு.வி.லவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நாட்டில் இடம்பெற்ற மேற்படி குண்டுத்தாக்குதலில் 270 பேர்கள் உயிரிழந்துள்ளதுடன் 500;ற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு கல்லடி அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக அஞ்சலிsamugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை கல்லடி அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.மட்டு வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 31 பேர்களது புகைப்படம் தாங்கிய பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.அவர்களது ஆத்மா சாந்தி வேண்டியும் அன்றைய தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளினதும் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்தனை நிகழ்த்தப்பட்;டு மலர் தூவி ஈகைச் சுடர் ஏற்றி நினைவேந்தல் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஞா.சுகுணன்.உயிர் நீத்தவர்களின் உறவுகளின சார்பில் அ.வேள் மற்றும் சமூக பற்றாளர் கு.வி.லவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நாட்டில் இடம்பெற்ற மேற்படி குண்டுத்தாக்குதலில் 270 பேர்கள் உயிரிழந்துள்ளதுடன் 500;ற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement