• Jan 16 2026

பக்கச்சார்பாக செயற்படும் கிராம சேவகர்; முறைகேடுகளை அம்பலப்படுத்திய நபருக்கு கொலை மிரட்டல்!

Chithra / Dec 15th 2025, 1:16 pm
image

 நாகர்கோவில் கிராம சேவகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டிய  நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன.


அதனடிப்படையில் வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.


அக் கிராமத்தில் பணிபுரியும் கிராம சேவகர் பக்கசார்பாக செயற்படுவதாகவும்,  பாதிக்கப்பட்ட சில வீடுகளை இதுவரைக்கும்  வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர்கோவில் மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு கருத்து தெரிவித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மூலம், 'ஊடகங்களுக்கு கொடுத்த கருத்தினை மறுபடியும் வாபஸ் வாங்குமாறும் இல்லை என்றால் ஆள் வைத்து கொலை செய்ததாகவும் கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

பக்கச்சார்பாக செயற்படும் கிராம சேவகர்; முறைகேடுகளை அம்பலப்படுத்திய நபருக்கு கொலை மிரட்டல்  நாகர்கோவில் கிராம சேவகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டிய  நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன.அதனடிப்படையில் வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.அக் கிராமத்தில் பணிபுரியும் கிராம சேவகர் பக்கசார்பாக செயற்படுவதாகவும்,  பாதிக்கப்பட்ட சில வீடுகளை இதுவரைக்கும்  வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர்கோவில் மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கருத்து தெரிவித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மூலம், 'ஊடகங்களுக்கு கொடுத்த கருத்தினை மறுபடியும் வாபஸ் வாங்குமாறும் இல்லை என்றால் ஆள் வைத்து கொலை செய்ததாகவும் கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement