• Dec 17 2025

இராணுவ முகாமில் பேருந்து சாரதிகளுக்கு இடையே முற்றிய தகராறு; ஒருவர் பலி

Chithra / Sep 17th 2025, 11:32 am
image

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொழும்பு தலங்கமா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தரமுல்ல - நாகஹமுல்ல பகுதியில் இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அதில் ஒருவரால் மற்றொருவருக்கு கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் தலையிலும் உடலிலும் காயமடைந்துள்ளார். 

கடுமையாக காயமடைந்த அவர் இராணுவத்தினரால் தலங்கமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்னி உயிரிழந்துள்ளார். 

இந்தக் கொலைக்குற்றத்தில் தொடர்புடைய சந்தேகநபரை தலங்கமா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை  தலங்கமா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

 

இராணுவ முகாமில் பேருந்து சாரதிகளுக்கு இடையே முற்றிய தகராறு; ஒருவர் பலி 14வது பொறியியல் சேவை படைப்பிரிவு இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தலங்கமா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தரமுல்ல - நாகஹமுல்ல பகுதியில் இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 14வது பொறியியல் சேவை படைப்பிரிவு முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரால் மற்றொருவருக்கு கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் தலையிலும் உடலிலும் காயமடைந்துள்ளார். கடுமையாக காயமடைந்த அவர் இராணுவத்தினரால் தலங்கமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்னி உயிரிழந்துள்ளார். இந்தக் கொலைக்குற்றத்தில் தொடர்புடைய சந்தேகநபரை தலங்கமா பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை  தலங்கமா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement