• Nov 28 2024

மேலதிக வகுப்புகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! வெளியான சுற்று நிருபம்

Chithra / Jan 4th 2024, 10:51 am
image

 

வடமேற்கு மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் மேலதிக கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதை முற்றாக தடை செய்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை 01.01.2024 அன்று நடைமுறைப்படுத்தப்படும் என வடமேல் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் வடமேல் மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர் திருமதி நயனா காரியவசத்தின்  கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை வடமேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு அதிபர்களே பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்லாத மாணவர்களைப் புறக்கணித்து பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாக்குவதாக பெற்றோரிடம் இருந்து வந்த முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நயனா காரியவசம் தெரிவித்துள்ளார்.


மேலதிக வகுப்புகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. வெளியான சுற்று நிருபம்  வடமேற்கு மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் மேலதிக கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதை முற்றாக தடை செய்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த சுற்றறிக்கை 01.01.2024 அன்று நடைமுறைப்படுத்தப்படும் என வடமேல் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் வடமேல் மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர் திருமதி நயனா காரியவசத்தின்  கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த சுற்றறிக்கை வடமேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு அதிபர்களே பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.சில ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்லாத மாணவர்களைப் புறக்கணித்து பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாக்குவதாக பெற்றோரிடம் இருந்து வந்த முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நயனா காரியவசம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement