• Sep 08 2024

கிண்ணியாவில் ஐஸ் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது...!

Anaath / Jul 13th 2024, 4:46 pm
image

Advertisement

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் பெண்  ஒருவர் கைது (12)  செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

 கூபா நகர் கிண்ணியாவை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து 11கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

இவர் முன்னரும் போதை பொருளில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறித்த பெண் போதை பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 அத்துடன்  கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்  குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கிண்ணியாவில் ஐஸ் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் பெண்  ஒருவர் கைது (12)  செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.  கூபா நகர் கிண்ணியாவை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 11கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இவர் முன்னரும் போதை பொருளில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறித்த பெண் போதை பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன்  கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும்  குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement