• Jul 05 2025

விடுமுறையை கழிக்க கனடாவில் இருந்து யாழ். வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்

Chithra / Jul 3rd 2025, 1:04 pm
image



கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்  வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கனடாவில் வசித்து வந்த 59 வயதுடைய இராஜரட்ணம் சுமதி எனும் பெண் ஒருவரே இவ்வாறு நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். 

இவர் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து, கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில், 


துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில்  படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியினர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

விடுமுறையை கழிக்க கனடாவில் இருந்து யாழ். வந்த பெண்ணுக்கு நடந்த சோகம் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்  வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடாவில் வசித்து வந்த 59 வயதுடைய இராஜரட்ணம் சுமதி எனும் பெண் ஒருவரே இவ்வாறு நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இவர் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து, கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில், துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில்  படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியினர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement