• Nov 26 2024

காதலை முறித்த காதலனின் மகளின் தகாத போலி படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Chithra / Dec 30th 2023, 3:13 pm
image

 

காதலை முறித்த காதலனின் ஏழு வயது மகளின் தகாத போலி படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா கலகெட்டிஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், தொழிற்சாலையில் இவருடன் பணிபுரியும் திருமணமான நபரொருவருடன் பல வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் அந்நபர் இந்த காதல் உறவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட  பெண், அந்நபரின் ஏழு வயது  மகளின் புகைப்படங்களை தகாத படங்களாக தயாரித்து அந்நபரின் வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலை முறித்த காதலனின் மகளின் தகாத போலி படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.  காதலை முறித்த காதலனின் ஏழு வயது மகளின் தகாத போலி படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா கலகெட்டிஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண், தொழிற்சாலையில் இவருடன் பணிபுரியும் திருமணமான நபரொருவருடன் பல வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.இந்நிலையில் அந்நபர் இந்த காதல் உறவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.இதனை அறிந்து கொண்ட  பெண், அந்நபரின் ஏழு வயது  மகளின் புகைப்படங்களை தகாத படங்களாக தயாரித்து அந்நபரின் வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளார்.பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement