• Nov 25 2024

கிழக்கில் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லம்...!samugammedia

Anaath / Dec 15th 2023, 12:22 pm
image

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமானது USAID ,SCORE அமைப்புக்களுடன் இணைந்து சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு இல்லம் உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, திருகோணமலை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பிரதான பிரச்சனைகளாக பாலியல் சமத்துவமின்மை,பாலியல் ரீதியான வன்முறைகள், இளம் வயது திருமணம், பாடசாலை இடைவிழகல், இளம் வயது கற்பம், போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிக அளவில் காணப்படுவதாக இணங் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்படும் பெண்களுக்கான தற்காழிக உடனடி பாதுகாப்பு நிவாரணமாக இந்த பாதுகாப்பு இல்லம் திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு இவ் இல்லத்தை திறந்து வைத்தார்.

ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.ஏம்.பி.ரத்நாயக்க திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி,  ,திருகோணமலை மாவட்ட பெண்கள் வளையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தத்தரணி பிரசாந்தினி உதயகுமார்,USAID அமைப்பின் ஜெயதேவன் கார்த்திக் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லம்.samugammedia கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமானது USAID ,SCORE அமைப்புக்களுடன் இணைந்து சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு இல்லம் உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, திருகோணமலை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பிரதான பிரச்சனைகளாக பாலியல் சமத்துவமின்மை,பாலியல் ரீதியான வன்முறைகள், இளம் வயது திருமணம், பாடசாலை இடைவிழகல், இளம் வயது கற்பம், போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிக அளவில் காணப்படுவதாக இணங் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் பாதிக்கப்படும் பெண்களுக்கான தற்காழிக உடனடி பாதுகாப்பு நிவாரணமாக இந்த பாதுகாப்பு இல்லம் திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு இவ் இல்லத்தை திறந்து வைத்தார்.ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.ஏம்.பி.ரத்நாயக்க திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி,  ,திருகோணமலை மாவட்ட பெண்கள் வளையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தத்தரணி பிரசாந்தினி உதயகுமார்,USAID அமைப்பின் ஜெயதேவன் கார்த்திக் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement