• Aug 20 2026

திருமணத்திற்கு இரு நாட்களே இருந்த நிலையில் கோர விபத்தில் இளைஞன் பலி

Chithra / Aug 19th 2026, 10:46 am
image


மாத்தறை – அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 25 வயதான  லக்மால் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


லக்மாலின் திருமணப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களும், தொழில் நிமித்தம் இஸ்ரேல் செல்வதற்கு மூன்று நாட்களுமே இருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.


மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் தற்போது கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, லக்மாலின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே   கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி, பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


எனினும், சட்ட நடைமுறைகளுக்கு அமைய சந்தேகநபரான பேருந்து சாரதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


மேலும், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்துச் செய்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு தயாராகியிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அக்குரஸ்ஸ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணத்திற்கு இரு நாட்களே இருந்த நிலையில் கோர விபத்தில் இளைஞன் பலி மாத்தறை – அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 25 வயதான  லக்மால் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.லக்மாலின் திருமணப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களும், தொழில் நிமித்தம் இஸ்ரேல் செல்வதற்கு மூன்று நாட்களுமே இருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் தற்போது கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, லக்மாலின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே   கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி, பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.எனினும், சட்ட நடைமுறைகளுக்கு அமைய சந்தேகநபரான பேருந்து சாரதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.மேலும், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்துச் செய்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு தயாராகியிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அக்குரஸ்ஸ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement