இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், ரயிலில் யாசகம் பெற்ற அனாதை இளம்பெண்ணை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பயணத்தின் போது பலர் அந்த பெண்ணை தவறான பார்வையில் பார்த்ததைக் கண்ட இளைஞன், அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி உள்ளார்.
அவர்களும் அப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
பின்பு அந்தப் பெண்ணின் வாழ்க்கை அறிந்து, அவருக்கு வாழ்க்கைத் துணையாக இருக்க முடிவெடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.
குறித்த தம்பதியரின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, மனிதநேயத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், ரயிலில் யாசகம் பெற்ற அனாதை இளம்பெண்ணை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரயில் பயணத்தின் போது பலர் அந்த பெண்ணை தவறான பார்வையில் பார்த்ததைக் கண்ட இளைஞன், அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி உள்ளார்.அவர்களும் அப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.பின்பு அந்தப் பெண்ணின் வாழ்க்கை அறிந்து, அவருக்கு வாழ்க்கைத் துணையாக இருக்க முடிவெடுத்துள்ளார்.இதை தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.குறித்த தம்பதியரின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, மனிதநேயத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன