• Feb 15 2026

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும்.! சாணக்கியன் உறுதி

Aathira / Dec 13th 2025, 5:05 pm
image

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்,  நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகியுள்ளதாக எம்.பி. இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெப்ரவரி 17க்கு முன் பழைய விண்ணப்பங்களை ரத்து செய்து புதியவற்றை அமல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.

அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும்,

பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது எனவும்,  

நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பங்குபற்றியதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும். சாணக்கியன் உறுதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்,  நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகியுள்ளதாக எம்.பி. இரா. சாணக்கியன் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பெப்ரவரி 17க்கு முன் பழைய விண்ணப்பங்களை ரத்து செய்து புதியவற்றை அமல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும்,பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது எனவும்,  நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பங்குபற்றியதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement