• Apr 25 2026

ஆலய திருப்பணி வேலையில் ஈடுபட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...! கிளிநொச்சியில் துயரம்...!samugammedia

Ziya / Jan 8th 2024, 2:43 pm
image

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இன்றையதினம் 11.20 மணியளவில் இராமநாதபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஆலயமொன்றின்  தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வவுனியா பூந்தோட்டம்  பகுதியைச் சேர்ந்த இளைஞன் மின்சாரம் தாக்கிய நிலையில்  உயிரிழந்துள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன் என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை கிளிநொச்சி  நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு  செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.





ஆலய திருப்பணி வேலையில் ஈடுபட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. கிளிநொச்சியில் துயரம்.samugammedia கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இன்றையதினம் 11.20 மணியளவில் இராமநாதபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஆலயமொன்றின்  தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வவுனியா பூந்தோட்டம்  பகுதியைச் சேர்ந்த இளைஞன் மின்சாரம் தாக்கிய நிலையில்  உயிரிழந்துள்ளார்.வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன் என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞனின் சடலத்தை கிளிநொச்சி  நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு  செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement