• Apr 16 2025

தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய அப்துல்லா மஹ்ரூப்..!

Sharmi / Sep 28th 2024, 3:59 pm
image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் சகல உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகி கொள்வதாகவும் 2024ம் ஆண்டின் இம் முறை பொதுத் தேர்தலிலும் போட்டியிடவுள்ளேன் எனவும்  முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (28) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் காங்கிரஸில் கடந்த பத்து வருடங்களாக பயணித்துள்ளேன். ஒன்பது வருட காலமாக தேசிய அமைப்பாளராக இருந்து 2015 ல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் 34 ஆயிரம் வாக்குகளை பெற்று முதலிடத்தில்  நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன் முன்னாள் அமைச்சர் ரிசாத் பிரதியமைச்சரை பெற்றுத் தந்தார்.

மக்கள் பணிக்காக இதனை அர்ப்பணம் செய்து பணியாற்றினேன். இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூதூரில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரை நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிப்பதற்காக சஜித்தும் ஹக்கீமும் எனக்கு எதிராக செயற்பட்டார்கள்.  இதனை ரிசாட்டுக்கு எடுத்து கூறியிருந்தேன்.

இருந்த போதிலும் இரு வருடங்களாக திட்டமிட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக வைத்தியர் ஹில்மிக்கு வேட்பாளரை தருவதாக கூறி சதியை நடாத்தி விட்டு சென்றுள்ளார்.

இவ்வளவு காலமாக இப்படியொரு பிரதான சூத்திரதாரி இருப்பார் என்று நினைக்கவில்லை.

தற்போது அறிந்து கொண்டேன். இவர்களது சயரூபத்தை இருந்த போதிலும் எதிர்வரும் 11 ம் திகதி வேட்பு மனு தாக்கலின் போது பொதுத் தேர்தலில் களமிறங்குவேன் என்பதை தெரிவிக்கிறேன் என்றார்.


தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய அப்துல்லா மஹ்ரூப். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் சகல உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகி கொள்வதாகவும் 2024ம் ஆண்டின் இம் முறை பொதுத் தேர்தலிலும் போட்டியிடவுள்ளேன் எனவும்  முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (28) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் காங்கிரஸில் கடந்த பத்து வருடங்களாக பயணித்துள்ளேன். ஒன்பது வருட காலமாக தேசிய அமைப்பாளராக இருந்து 2015 இல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் 34 ஆயிரம் வாக்குகளை பெற்று முதலிடத்தில்  நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன் முன்னாள் அமைச்சர் ரிசாத் பிரதியமைச்சரை பெற்றுத் தந்தார். மக்கள் பணிக்காக இதனை அர்ப்பணம் செய்து பணியாற்றினேன். இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூதூரில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரை நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிப்பதற்காக சஜித்தும் ஹக்கீமும் எனக்கு எதிராக செயற்பட்டார்கள்.  இதனை ரிசாட்டுக்கு எடுத்து கூறியிருந்தேன். இருந்த போதிலும் இரு வருடங்களாக திட்டமிட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக வைத்தியர் ஹில்மிக்கு வேட்பாளரை தருவதாக கூறி சதியை நடாத்தி விட்டு சென்றுள்ளார். இவ்வளவு காலமாக இப்படியொரு பிரதான சூத்திரதாரி இருப்பார் என்று நினைக்கவில்லை. தற்போது அறிந்து கொண்டேன். இவர்களது சயரூபத்தை இருந்த போதிலும் எதிர்வரும் 11 ஆம் திகதி வேட்பு மனு தாக்கலின் போது பொதுத் தேர்தலில் களமிறங்குவேன் என்பதை தெரிவிக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now