• Aug 11 2025

ஜனாதிபதிக்கு எதிரான யூடியூப் தளங்களில் அவதூறுப் பிரச்சாரம்; சிஐடி தீவிர விசாரணை!

CID
Chithra / Aug 11th 2025, 2:11 pm
image

  

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு பிரச்சாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், அவதூறு பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பதாக கண்டறியப்பட்ட ஒரு வலைத்தளம் மற்றும் யூடியூப் அலைவரிசை குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு சிறப்பு சிஐடி குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவதூறுப்‍ பிரச்சாரத்தில் அமைச்சர்கள் மற்றும் அரச ஆதரவாளர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி சிஐடியிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அவதூறு பிரச்சாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதிக்கு எதிரான யூடியூப் தளங்களில் அவதூறுப் பிரச்சாரம்; சிஐடி தீவிர விசாரணை   கடந்த சில நாட்களாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு பிரச்சாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், அவதூறு பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பதாக கண்டறியப்பட்ட ஒரு வலைத்தளம் மற்றும் யூடியூப் அலைவரிசை குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு சிறப்பு சிஐடி குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அவதூறுப்‍ பிரச்சாரத்தில் அமைச்சர்கள் மற்றும் அரச ஆதரவாளர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி சிஐடியிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.அவதூறு பிரச்சாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement