ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் கடற்கரைப்பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலமானது யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் உருக்குலைந்த நிலையில் உள்ளதால் சடலத்தை இனங்காண முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கடந்த வாரம் புங்குடுதீவு பகுதியில் ஆள் எவருமற்ற படகு ஒன்று கரையொதுங்கியது.
புங்குடுதீவில் கரையொதுங்கிய படகு குறித்த அடையாளம் தெரியாத நபரினுடையதாக இருக்கலாம் என்ற போர்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மண்கும்பான் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் கடற்கரைப்பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.குறித்த சடலமானது யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலம் உருக்குலைந்த நிலையில் உள்ளதால் சடலத்தை இனங்காண முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதேநேரம் கடந்த வாரம் புங்குடுதீவு பகுதியில் ஆள் எவருமற்ற படகு ஒன்று கரையொதுங்கியது. புங்குடுதீவில் கரையொதுங்கிய படகு குறித்த அடையாளம் தெரியாத நபரினுடையதாக இருக்கலாம் என்ற போர்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.