வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை(20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
பெரிய பரந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் நகுலேஸ்வரன் (வயது-47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த19ஆம் திகதி விசுவமாடு ரெட்பானாவில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
12 ஆம் கட்டை விசுவமடுப் பகுதியில் மண் ஏற்றிய நிலையில் பழுதடைந்து வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் இரவு 8:30 மணி அளவில் மோதி மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அடுத்து அவர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(20) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை புதுக்குடியிருப்பு பொலிசார் நெறிப்படுத்தினர்.
கிளிநொச்சியில் விபத்து - படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு samugammedia வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை(20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.பெரிய பரந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் நகுலேஸ்வரன் (வயது-47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவர் கடந்த19ஆம் திகதி விசுவமாடு ரெட்பானாவில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து நேர்ந்துள்ளது.12 ஆம் கட்டை விசுவமடுப் பகுதியில் மண் ஏற்றிய நிலையில் பழுதடைந்து வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் இரவு 8:30 மணி அளவில் மோதி மயங்கி விழுந்துள்ளார்.இதனை அடுத்து அவர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(20) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை புதுக்குடியிருப்பு பொலிசார் நெறிப்படுத்தினர்.