அரச அதிகாரிகள் எவ்வித அரசியல் அழுத்தங்களுமின்றி சுயாதீனமாக இயங்கி, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம், மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மற்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பாலத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப ஆய்வுகளுடன் மீள நிர்மாணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முந்தானையாறு திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் ஏனைய நீர்ப்பாசனக் குறைபாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
அதிகரித்து வரும் யானைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான யானை வேலிகளைத் துரிதமாக அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
சட்டவிரோத மண் மற்றும் கிறவல் அகழ்வினால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைத் தடுக்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். அத்துடன், மண் அகழ்வுக்கான இடங்களை முறையாக அடையாளம் கண்டு, சட்டப்பூர்வமான முறையில் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
வெள்ளப் பெருக்கினால் அறுவடை செய்த நெல்லினை உலர வைக்க முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி, புதிய நெல் உலர்த்திகளை கொள்வனவு செய்வது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
"மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து உயர் அதிகாரிகள் என்னுடன் நேரடியாகக் கலந்துரையாடலாம். அரசியல் தலையீடுகளுக்கு அஞ்சாமல், மாவட்டத்தின் உண்மையான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி மக்கள் சேவையை முன்னெடுங்கள்." - என்று அமைச்சர் அதிகாரிகளை ஊக்கப்படுத்தினார்.
அரசியல் அழுத்தங்களுக்கு அஞ்சாது செயற்படுங்கள் - அதிகாரிகளுக்கு அமைச்சர் சுனில் அறிவுறுத்தல் அரச அதிகாரிகள் எவ்வித அரசியல் அழுத்தங்களுமின்றி சுயாதீனமாக இயங்கி, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம், மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மற்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.குறிப்பாக அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பாலத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப ஆய்வுகளுடன் மீள நிர்மாணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.முந்தானையாறு திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் ஏனைய நீர்ப்பாசனக் குறைபாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.அதிகரித்து வரும் யானைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான யானை வேலிகளைத் துரிதமாக அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.சட்டவிரோத மண் மற்றும் கிறவல் அகழ்வினால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைத் தடுக்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். அத்துடன், மண் அகழ்வுக்கான இடங்களை முறையாக அடையாளம் கண்டு, சட்டப்பூர்வமான முறையில் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.வெள்ளப் பெருக்கினால் அறுவடை செய்த நெல்லினை உலர வைக்க முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி, புதிய நெல் உலர்த்திகளை கொள்வனவு செய்வது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது."மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து உயர் அதிகாரிகள் என்னுடன் நேரடியாகக் கலந்துரையாடலாம். அரசியல் தலையீடுகளுக்கு அஞ்சாமல், மாவட்டத்தின் உண்மையான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி மக்கள் சேவையை முன்னெடுங்கள்." - என்று அமைச்சர் அதிகாரிகளை ஊக்கப்படுத்தினார்.