• Feb 11 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை..!

Chithra / May 6th 2024, 1:31 pm
image

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் மற்றும் சம்பவத்தை ஆவணப்படுத்திய அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞயை விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற குறித்த இளைஞன் இன்று காலை விமான நிலைய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களை கட்டுநாயக்க பொலிஸார் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளனர்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை.  கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் மற்றும் சம்பவத்தை ஆவணப்படுத்திய அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.கடந்த மே மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞயை விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற குறித்த இளைஞன் இன்று காலை விமான நிலைய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இதேவேளை, விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களை கட்டுநாயக்க பொலிஸார் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement