• Apr 01 2025

தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்...! மக்கள் விசனம்...!

Sharmi / May 6th 2024, 1:58 pm
image

கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் நாளை மாலை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் தினமாகிய இன்றையதினம்(06) கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அறியாத மக்கள் அவர்களது அலுவலகங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக  தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும் சுகயீன விடுமுறையினை முன்னெடுத்துள்ளனர். கிராம உத்தியோகத்தர்களை சந்திக்க தூர பிரதேசங்களில் இருந்து பிரதேச செயலகத்துக்கு  சேவை பெற சென்ற மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.




தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம். மக்கள் விசனம். கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த போராட்டம் நாளை மாலை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் தினமாகிய இன்றையதினம்(06) கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அறியாத மக்கள் அவர்களது அலுவலகங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக  தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும் சுகயீன விடுமுறையினை முன்னெடுத்துள்ளனர். கிராம உத்தியோகத்தர்களை சந்திக்க தூர பிரதேசங்களில் இருந்து பிரதேச செயலகத்துக்கு  சேவை பெற சென்ற மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now