• May 03 2024

மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை...! வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட நிலை...!

Sharmi / Mar 13th 2024, 2:52 pm
image

Advertisement

மன்னார் நகரசபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெறாது வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்றைய தினம்(13) மன்னார் நகரசபை ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது.

உரிய வரி செலுத்தி அனுமதி பெறாது உள்ளூர் வர்தகர்களின் வர்தக நிலையங்களில் நீண்ட நாட்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரபல நிறுவனங்களின் விளம்பர காட்சி பலகைகளே இன்று  வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

முன்னதாகவே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளுக்கு அனுமதி பெற்று வரியை செலுத்தி காட்சிப்படுத்துமாறு நகரசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் கடிதங்கள் அனுப்பப்பட்டும் உரிய அனுமதியை பெறாத வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகளே மேற்கண்டவாறு அகற்றப்பட்டுள்ளது.

மேலும் நகரசபை எல்லைக்குள் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள சிறு வியாபர வர்த்தக நிலையங்கள்,சிற்றூண்டி நிலையங்கள் குளிர்பான நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மன்னார் நகரசபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை. வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட நிலை. மன்னார் நகரசபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெறாது வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்றைய தினம்(13) மன்னார் நகரசபை ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது.உரிய வரி செலுத்தி அனுமதி பெறாது உள்ளூர் வர்தகர்களின் வர்தக நிலையங்களில் நீண்ட நாட்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரபல நிறுவனங்களின் விளம்பர காட்சி பலகைகளே இன்று  வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.முன்னதாகவே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளுக்கு அனுமதி பெற்று வரியை செலுத்தி காட்சிப்படுத்துமாறு நகரசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் கடிதங்கள் அனுப்பப்பட்டும் உரிய அனுமதியை பெறாத வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகளே மேற்கண்டவாறு அகற்றப்பட்டுள்ளது.மேலும் நகரசபை எல்லைக்குள் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள சிறு வியாபர வர்த்தக நிலையங்கள்,சிற்றூண்டி நிலையங்கள் குளிர்பான நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மன்னார் நகரசபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement