பளை காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் பெரும் தொகை பணம் மன்னாருக்கு செல்லவுள்ளதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பளை காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது வடக்கு மகாணாண சபையுடன் ஒரு இணக்கபாட்டி செய்திருந்ததாக கூறப்படுகின்றது. பளை காற்றாலை உற்பத்தி நிலையத்தினால் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி மன்னாருக்கும், பளைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வருமானம் இந்த மாவட்டத்துக்கேயானது. யார் அந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பில் உடனடியாக உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும். மன்னாருக்கு பெரிய காற்றாலை வரப்போகின்றது. அங்கு காற்றாலை தேவை இல்லை என்றவர்கள் இங்குள்ள காசை எதிர்பார்க்கின்றனர்.
இதில் பிரதேசவாதம் இல்லை. அங்கு காற்றாலை அமைவதற்கு சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அவவாறான நிலையில் இங்குள்ள காசை எவ்வாறு அங்கு செலவழிப்பது? இந்த மாவட்டத்திற்கான காசு இந்த மாவட்டத்திற்கே செலவழிக்க வேண்டும்.
ஆளுநருடன் இவ்விடயம் தொடர்பில் உடனயாக கதைக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பில் ஆளுநருடன் கதைப்பேன். இந்த மாவட்டத்திற்கான பணம் இந்த மாவட்டத்திற்கே செலவழிக்க வேண்டும் என்ற விடயத்தை அவரிடம் நான் சொல்வேன். நீங்களும் அவருக்கு சொல்லுங்கள்.
இம்முறை மன்னாருக்கு 15 மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 19.8 ஆயுள்வேதம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பளையில் ஏற்றுமதிக்காக முருங்கையிலிருந்து பெறக்கூடிய உற்பத்திகளை செய்வதற்கான கட்டடம் ஒன்று கட்டப்பட்டு பாவனையின்றி உள்ளது. அதற்கான இயந்திரத்தை வாங்கி பொருத்தினால் அதனை இயங்க வைக்க முடியும். அந்த பணத்தை கொடுத்தால் வாழ்வாதாரமாக மக்களிற்கு கிடைக்கும்.
ஆயுள்வேத தேவைக்கு ஒதுக்கப்பட்டதாயின் அதில் ஒருபகுதியை இந்த தொழிற்சாலைக்கு கொடுத்துவிட்டு, அடுத்த கட்டமாக அவர்களிற்கு கொடுக்கலாம். உடனயாக ஆயுள்வேதம் கட்டி முக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அதற்கு பொருத்தவேண்டிய இயந்திரத்தை வாங்க முடியும்.
பளை முகாவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த முருங்கை சார் உற்பத்தி நிலையம் தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
பளை மின் உற்பத்தி நிலையத்தின் பெரும் தொகை பணம் மன்னாருக்கு செல்லவுள்ளதை தடுத்து நிறுத்த நடவடிக்கை samugammedia பளை காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் பெரும் தொகை பணம் மன்னாருக்கு செல்லவுள்ளதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பளை காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது வடக்கு மகாணாண சபையுடன் ஒரு இணக்கபாட்டி செய்திருந்ததாக கூறப்படுகின்றது. பளை காற்றாலை உற்பத்தி நிலையத்தினால் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி மன்னாருக்கும், பளைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த வருமானம் இந்த மாவட்டத்துக்கேயானது. யார் அந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பில் உடனடியாக உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும். மன்னாருக்கு பெரிய காற்றாலை வரப்போகின்றது. அங்கு காற்றாலை தேவை இல்லை என்றவர்கள் இங்குள்ள காசை எதிர்பார்க்கின்றனர்.இதில் பிரதேசவாதம் இல்லை. அங்கு காற்றாலை அமைவதற்கு சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அவவாறான நிலையில் இங்குள்ள காசை எவ்வாறு அங்கு செலவழிப்பது இந்த மாவட்டத்திற்கான காசு இந்த மாவட்டத்திற்கே செலவழிக்க வேண்டும். ஆளுநருடன் இவ்விடயம் தொடர்பில் உடனயாக கதைக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பில் ஆளுநருடன் கதைப்பேன். இந்த மாவட்டத்திற்கான பணம் இந்த மாவட்டத்திற்கே செலவழிக்க வேண்டும் என்ற விடயத்தை அவரிடம் நான் சொல்வேன். நீங்களும் அவருக்கு சொல்லுங்கள்.இம்முறை மன்னாருக்கு 15 மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 19.8 ஆயுள்வேதம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பளையில் ஏற்றுமதிக்காக முருங்கையிலிருந்து பெறக்கூடிய உற்பத்திகளை செய்வதற்கான கட்டடம் ஒன்று கட்டப்பட்டு பாவனையின்றி உள்ளது. அதற்கான இயந்திரத்தை வாங்கி பொருத்தினால் அதனை இயங்க வைக்க முடியும். அந்த பணத்தை கொடுத்தால் வாழ்வாதாரமாக மக்களிற்கு கிடைக்கும். ஆயுள்வேத தேவைக்கு ஒதுக்கப்பட்டதாயின் அதில் ஒருபகுதியை இந்த தொழிற்சாலைக்கு கொடுத்துவிட்டு, அடுத்த கட்டமாக அவர்களிற்கு கொடுக்கலாம். உடனயாக ஆயுள்வேதம் கட்டி முக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அதற்கு பொருத்தவேண்டிய இயந்திரத்தை வாங்க முடியும்.பளை முகாவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த முருங்கை சார் உற்பத்தி நிலையம் தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவமைச்சர் இதன்போது தெரிவித்தார்.