ஆசியபசுபிக் கூட்டுறவு வலையமைப்பின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை இலங்கையில் உள்ள கூட்டுறவு வலையமைப்புகளுக்கு வழங்கி அதன் ஊடாக குறைந்த விலையில் மக்களுக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் வாரத்தில் அதிக பொருட்களைவ விற்பனை செய்வோர் தொடர்பில் கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதன் மூலம் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெல்த் கோப் வங்கியின் நான்காவது கிளை இன்று மட்டக்களப்பு ஆரையம்பதியில் பிரதான வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
வெல்த் கோப் வங்கியின் தலைவர் தேசகீர்த்தி மொகோட்டடி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி டினேஸ்,மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் சர்வேஸ்வரன், பிரதம நிறைவேற்று அதிகாரி காஞ்சன பபசர மனஞ்சேன, வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்மாகாணங்களில் காணப்படும் இவ் வங்கியானது முதல் தடவையாக வடகிழக்கு மாகாணங்களில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு செங்கலடியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வங்கி கிளைகள் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கின் பல இடங்களில் திறந்து வைக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கிராமிய மட்டத்தில் தொழில்துறையிணையும் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை இணைப்பதற்காகவும் இந்த வங்கிகள் திறந்து வைக்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை. வியாழேந்திரன்.samugammedia ஆசியபசுபிக் கூட்டுறவு வலையமைப்பின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை இலங்கையில் உள்ள கூட்டுறவு வலையமைப்புகளுக்கு வழங்கி அதன் ஊடாக குறைந்த விலையில் மக்களுக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.எதிர்வரும் வாரத்தில் அதிக பொருட்களைவ விற்பனை செய்வோர் தொடர்பில் கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதன் மூலம் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வெல்த் கோப் வங்கியின் நான்காவது கிளை இன்று மட்டக்களப்பு ஆரையம்பதியில் பிரதான வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.வெல்த் கோப் வங்கியின் தலைவர் தேசகீர்த்தி மொகோட்டடி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி டினேஸ்,மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் சர்வேஸ்வரன், பிரதம நிறைவேற்று அதிகாரி காஞ்சன பபசர மனஞ்சேன, வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தென்மாகாணங்களில் காணப்படும் இவ் வங்கியானது முதல் தடவையாக வடகிழக்கு மாகாணங்களில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு செங்கலடியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வங்கி கிளைகள் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கின் பல இடங்களில் திறந்து வைக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.கிராமிய மட்டத்தில் தொழில்துறையிணையும் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை இணைப்பதற்காகவும் இந்த வங்கிகள் திறந்து வைக்கப்படுகிறது.