• Nov 26 2024

வல்லப்பட்டை தாவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை...!

Anaath / Jun 25th 2024, 6:22 pm
image

வல்லப்பட்டை தாவரங்களில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பயிர்களை இனங்கண்டு அவற்றை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் ஆராயப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஏற்றுமதியை பரந்த அளவில் அபிவிருத்தி செய்ய ஏற்றுமதி விவசாய திணைக்களம் முயற்சிக்காமை குறித்து குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. 2016ஆம் ஆண்டு குறித்த திணைக்களம் கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோது, அவ்வருடத்தில் 0.5 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை 2020ஆம் ஆண்டாகும் போது ஒரு பில்லியன் டொலராக அதிகரிப்பதற்குத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இருந்தபோதும், திருப்தியடையும் அளவுக்கு இது நிறைவேற்றப்படவில்லையென குழு தெரிவித்தது. அது மாத்திரமன்றி இதுவரை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கப் போதியளவு முயற்சிகள் எடுக்கப்படவில்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது. அத்துடன் திக உற்பத்தித் திறன் கொண்ட பயிர்களை இனங்கண்டு அவற்றை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்நிலையிலேயே குறித்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை வல்லப்பட்டை தாவரத்தை ஊக்குவிப்பது தொடர்பில் காணப்படும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. 

அத்துடன், விவசாய அபிவிருத்திச் சபைகள் நிறுவப்படாமை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வல்லப்பட்டை தாவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை. வல்லப்பட்டை தாவரங்களில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பயிர்களை இனங்கண்டு அவற்றை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் ஆராயப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஏற்றுமதியை பரந்த அளவில் அபிவிருத்தி செய்ய ஏற்றுமதி விவசாய திணைக்களம் முயற்சிக்காமை குறித்து குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. 2016ஆம் ஆண்டு குறித்த திணைக்களம் கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோது, அவ்வருடத்தில் 0.5 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை 2020ஆம் ஆண்டாகும் போது ஒரு பில்லியன் டொலராக அதிகரிப்பதற்குத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இருந்தபோதும், திருப்தியடையும் அளவுக்கு இது நிறைவேற்றப்படவில்லையென குழு தெரிவித்தது. அது மாத்திரமன்றி இதுவரை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கப் போதியளவு முயற்சிகள் எடுக்கப்படவில்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது. அத்துடன் திக உற்பத்தித் திறன் கொண்ட பயிர்களை இனங்கண்டு அவற்றை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்நிலையிலேயே குறித்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது.இதேவேளை வல்லப்பட்டை தாவரத்தை ஊக்குவிப்பது தொடர்பில் காணப்படும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், விவசாய அபிவிருத்திச் சபைகள் நிறுவப்படாமை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement