• Jun 29 2024

யாழ்ப்பாண உணவுகளுக்கு வெளி பிரதேச மக்களிடமும் வெளிநாட்டு மக்களிடமும் அதிக வரவேற்பு...! வடமாகாண ஆளுநர் பெருமிதம்...!

Sharmi / Jun 25th 2024, 6:02 pm
image

Advertisement

யாழ்ப்பாண உணவுகளுக்கு வெளி பிரதேச மக்களிடமும்,  வெளிநாட்டு மக்களிடமும் அதிக வரவேற்பு காணப்படுவதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

சங்கானையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை இன்றையதினம்(25)  திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மக்களோடு இணைந்து  பிரதேச சபைகள் செயற்பட வேண்டும்.

அதற்கமைய பல சிறப்பான வேலைத்திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாகவும், மாகாண சபையினூடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாகாணத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்.

ஒவ்வொரு பிராந்தியங்களுக்குமான வெவ்வேறு தனித்துவங்கள் காணப்படுகின்றன. எமது மண்ணின் தனித்துவங்களையும் பாரம்பரியங்களையும் நாமே பாதுகாக்க வேண்டும்.

யாழ்ப்பாண உணவுகளுக்கு வெளி பிரதேச மக்களிடமும், வெளிநாட்டு மக்களிடமும் அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

அவற்றை தொடர்ந்தும் பேணி பாதுகாக்க வேண்டும். அம்மாச்சி பாரம்பரிய உணவகங்கள் ஊடாக தொடர்ச்சியாக மக்களுக்கான தரமான, சுவையான உணவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


யாழ்ப்பாண உணவுகளுக்கு வெளி பிரதேச மக்களிடமும் வெளிநாட்டு மக்களிடமும் அதிக வரவேற்பு. வடமாகாண ஆளுநர் பெருமிதம். யாழ்ப்பாண உணவுகளுக்கு வெளி பிரதேச மக்களிடமும்,  வெளிநாட்டு மக்களிடமும் அதிக வரவேற்பு காணப்படுவதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.சங்கானையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை இன்றையதினம்(25)  திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மக்களோடு இணைந்து  பிரதேச சபைகள் செயற்பட வேண்டும். அதற்கமைய பல சிறப்பான வேலைத்திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாகவும், மாகாண சபையினூடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாணத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். ஒவ்வொரு பிராந்தியங்களுக்குமான வெவ்வேறு தனித்துவங்கள் காணப்படுகின்றன. எமது மண்ணின் தனித்துவங்களையும் பாரம்பரியங்களையும் நாமே பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாண உணவுகளுக்கு வெளி பிரதேச மக்களிடமும், வெளிநாட்டு மக்களிடமும் அதிக வரவேற்பு காணப்படுகின்றது. அவற்றை தொடர்ந்தும் பேணி பாதுகாக்க வேண்டும். அம்மாச்சி பாரம்பரிய உணவகங்கள் ஊடாக தொடர்ச்சியாக மக்களுக்கான தரமான, சுவையான உணவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement