• Jun 29 2024

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதி...! வெற்றி நிச்சயம்...! விஜயதாச ராஜபக்ஷ திட்டவட்டம்...!

Sharmi / Jun 25th 2024, 5:21 pm
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம் எனவும் அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்பதுடன் அதில் வெற்றி பெறுவதும் உறுதி. 

அவ்வாறு வெற்றி பெற்ற பின்னர் எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் அரசமைப்பின் பிரகாரம் வலுவற்றதாகிவிடும். இதனால் கட்சித் தலைமைத்துவம் தொடர்பிலும் பிரச்சினை எழாது.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம். உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதி. வெற்றி நிச்சயம். விஜயதாச ராஜபக்ஷ திட்டவட்டம். ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம் எனவும் அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,"ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்பதுடன் அதில் வெற்றி பெறுவதும் உறுதி. அவ்வாறு வெற்றி பெற்ற பின்னர் எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் அரசமைப்பின் பிரகாரம் வலுவற்றதாகிவிடும். இதனால் கட்சித் தலைமைத்துவம் தொடர்பிலும் பிரச்சினை எழாது.ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம். உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement