• Sep 20 2024

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ரெலோ மாவட்ட பொறுப்பாளர் அறிவிப்பு!

Tamil nila / Aug 25th 2024, 9:54 pm
image

Advertisement

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார்  தெரிவித்துள்ளார்.

வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் இன்று  மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளில் தமிழீழ விடுதலை இயக்கமும் ஒன்றாகும். ஆனால் அக் கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதுடன், அக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் அவர்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பொது வேட்பாளரை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ரெலோவின் உண்மையான நிலைப்பாடு என்ன என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ரெலோ சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த மாவட்ட பொறுப்பாளர் வியகுமார் வினோ எம்.பி தற்போது கட்சியின் எந்தவொரு கட்டமைப்பிலும் இல்லை. அவர் எந்த பதவிகளிலும் இல்லை. அவர் ஒரு சாதாரண உறுப்பினர். அவர் தற்போது பலவிதமாக கதைக்கிறார். நாம் கட்சியாக தலைமையின் அனுமதியுடன் இந்த பொது வேட்பாளர் தொடர்பான கட்டமைப்பில் தொடர்ந்தும் பயணிப்போம் எனக் கூறுகின்றேன். இந்த தேர்தல் முடியும் முன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நாம் பொது வேட்பாளருக்கே ஆதரவு எனத் தெரிவித்தார். 

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ரெலோ மாவட்ட பொறுப்பாளர் அறிவிப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார்  தெரிவித்துள்ளார்.வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் இன்று  மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளில் தமிழீழ விடுதலை இயக்கமும் ஒன்றாகும். ஆனால் அக் கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதுடன், அக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் அவர்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பொது வேட்பாளரை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ரெலோவின் உண்மையான நிலைப்பாடு என்ன என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ரெலோ சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.இதற்கு பதில் அளித்த மாவட்ட பொறுப்பாளர் வியகுமார் வினோ எம்.பி தற்போது கட்சியின் எந்தவொரு கட்டமைப்பிலும் இல்லை. அவர் எந்த பதவிகளிலும் இல்லை. அவர் ஒரு சாதாரண உறுப்பினர். அவர் தற்போது பலவிதமாக கதைக்கிறார். நாம் கட்சியாக தலைமையின் அனுமதியுடன் இந்த பொது வேட்பாளர் தொடர்பான கட்டமைப்பில் தொடர்ந்தும் பயணிப்போம் எனக் கூறுகின்றேன். இந்த தேர்தல் முடியும் முன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நாம் பொது வேட்பாளருக்கே ஆதரவு எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement