கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நடிகராக திகழ்ந்த நடிகர் ராஜேஷ் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று(29) காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
75 வயதான நடிகர் ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் மட்டுமல்லாது பல்வேறு சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று இவர் நடித்து வந்துள்ளார்
2024 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' படமே அவரின் கடைசி படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் ராஜேஷின் மறைவு தமிழ் திரையுலகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் பொன்விழா கண்ட நடிகர் ராஜேஷ் மறைவு. கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நடிகராக திகழ்ந்த நடிகர் ராஜேஷ் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று(29) காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.75 வயதான நடிகர் ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.திரைப்படங்களில் மட்டுமல்லாது பல்வேறு சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று இவர் நடித்து வந்துள்ளார் 2024 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' படமே அவரின் கடைசி படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ராஜேஷின் மறைவு தமிழ் திரையுலகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.