• Sep 20 2024

கிறிஸ்தவ போதகரை இன்டர்போலின் உதவியுடன் கைது செய்ய ஆலோசனை..??? - நிஹால் தல்துவா வெளியிட்ட தகவல்.! samugammedia

Sharmi / May 27th 2023, 11:01 am
image

Advertisement

மதங்களை இழிவுபடுத்திய கிறிஸ்தவ போதகரை இன்டர்போலின் உதவியுடன் கைது செய்வதற்காக ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்..

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரையில் இலங்கைக்கு வரவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரைக் கைது செய்வதற்கு இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போதகரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இன்டர்போலின் ஆதரவைக் கோருவது தொடர்பில் இதுவரை சட்ட ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட போதகருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதகரின் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடந்த 24ஆம் திகதி சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ போதகரை இன்டர்போலின் உதவியுடன் கைது செய்ய ஆலோசனை. - நிஹால் தல்துவா வெளியிட்ட தகவல். samugammedia மதங்களை இழிவுபடுத்திய கிறிஸ்தவ போதகரை இன்டர்போலின் உதவியுடன் கைது செய்வதற்காக ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரையில் இலங்கைக்கு வரவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரைக் கைது செய்வதற்கு இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் போதகரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இன்டர்போலின் ஆதரவைக் கோருவது தொடர்பில் இதுவரை சட்ட ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட போதகருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.போதகரின் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடந்த 24ஆம் திகதி சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.இதேவேளை போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement