• May 19 2024

உக்ரைன் - ரஷ்யா யுத்தம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..! samugammedia

Tamil nila / May 27th 2023, 10:54 am
image

Advertisement

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. 

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன.  

ரஷ்யா மீது பொருளாதார தடை, உக்ரைனுக்கு ஆயுதம் விநியோகம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் குறித்த நாடுகள் ஈடுபடுகின்றன.  

இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் குறித்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகின்றது. 15 மாதங்களை கடந்தும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு சபை துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வடேவிடம் உக்ரைன் போர் நிலவரம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் , உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு அதாவது பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என்றும், ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் போர் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா யுத்தம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல். samugammedia நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன.  ரஷ்யா மீது பொருளாதார தடை, உக்ரைனுக்கு ஆயுதம் விநியோகம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் குறித்த நாடுகள் ஈடுபடுகின்றன.  இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் குறித்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகின்றது. 15 மாதங்களை கடந்தும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு சபை துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வடேவிடம் உக்ரைன் போர் நிலவரம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர் , உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு அதாவது பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என்றும், ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் போர் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இது ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement