• Nov 22 2024

எலோன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி ரணில்..!

Chithra / May 19th 2024, 12:50 pm
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெஸ்லா மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்கை  நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு இந்தோனேசியா - பாலியில்  இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஸ்டார் லிங்க் வலையமைப்பை இலங்கையில் செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் பாலியில் நடைபெறும் பத்தாவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நேற்று இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மாநாடானது, மே 18 முதல் 20 வரை நடைபெற உள்ளது.

மேலும், ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் எலோன் மஸ்க் உடனான ரணிலின் சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


எலோன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி ரணில். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெஸ்லா மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்கை  நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பு இந்தோனேசியா - பாலியில்  இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின் போது ஸ்டார் லிங்க் வலையமைப்பை இலங்கையில் செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் பாலியில் நடைபெறும் பத்தாவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நேற்று இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.இந்த மாநாடானது, மே 18 முதல் 20 வரை நடைபெற உள்ளது.மேலும், ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் எலோன் மஸ்க் உடனான ரணிலின் சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement