மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் மாங்குளம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் திரவப் பால் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேநேரம், மற்றுமோர் பெண் படுகாயமடைந்துள்ளார்.
தற்சமயம் அவர் சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்குளத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய பவுசர்; இளைஞர் உயிரிழப்பு பெண் காயம் மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் மாங்குளம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த பகுதியில் திரவப் பால் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதேநேரம், மற்றுமோர் பெண் படுகாயமடைந்துள்ளார்.தற்சமயம் அவர் சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.