• Oct 18 2025

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்!

Chithra / Oct 17th 2025, 11:57 am
image

 

28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் நீதவான் உத்தரவிட்டார்.


மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்  28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் நீதவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement