• Oct 18 2025

யுத்த வெற்றிக்கான முழு கெளரவமும் மஹிந்தவுக்கே உரித்து - சரத் வீரசேகர சூளுரை

Chithra / Oct 17th 2025, 1:47 pm
image


யுத்த வெற்றி அல்லது தோல்வியை அரசியல்வாதிகளே பொறுப்பேற்பார்கள். அவ்வாறெனில், இந்த யுத்தத்தை வெற்றி கொண்டதற்கான முழு கெளரவமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரித்தாக வேண்டும்  என முன்னாள் அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கி உலகின் பாரதூரமான பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும்

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

பாதாள குழுவினருக்கு தேவையின் அடிப்படையிலோ அல்லது தேவையற்ற வகையிலோ பிரபல்யத்தை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுத்தாலும், ஒவ்வொரு அரசாங்கங்களும் வெளிநாடுகளிலும் பாதாள குழு உறுப்பினர்களை கைதுசெய்துள்ளன.

நான் பொது மக்கள் அமைச்சராக இருந்தபோதும் வெளிநாடுகளிலுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம்.

அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும் என்ற கருத்து பீல்ட் மார்சல் சரத் பொன்சேகவினால் வெளியிடப்பட்ட கருத்தாகும். அதேபோன்று, குணமுடைய தமிழ், சிங்கள, முஸ்லிம் என சகல மக்களும் நிராகரிக்கும் அறிவிப்பையே அவர் வெளியிட்டுள்ளார். 

எனவே, யுத்தத்தை வெற்றிக்கொள்வது அரசியல் வாதிகளே. யுத்தமொன்றின் வெற்றி மற்றும் தோல்வியின் பொறுப்பை அரசியல்வாதிகளே ஏற்பார்கள்.

அவ்வாறெனில் இந்த யுத்தத்தை வெற்றிகொண்டதற்கான முழு கெளரவமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரித்தாக வேண்டும். 

அதனை யாராலும் தவிர்க்க முடியாது. அதற்காக மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று கூறமாட்டேம். அமைதியாக வாழக் கூடிய சூழலை உருவாக்கி கொடுத்து உலகின் பாரதூரமான பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும் என்றார்.

யுத்த வெற்றிக்கான முழு கெளரவமும் மஹிந்தவுக்கே உரித்து - சரத் வீரசேகர சூளுரை யுத்த வெற்றி அல்லது தோல்வியை அரசியல்வாதிகளே பொறுப்பேற்பார்கள். அவ்வாறெனில், இந்த யுத்தத்தை வெற்றி கொண்டதற்கான முழு கெளரவமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரித்தாக வேண்டும்  என முன்னாள் அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கி உலகின் பாரதூரமான பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும்நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.பாதாள குழுவினருக்கு தேவையின் அடிப்படையிலோ அல்லது தேவையற்ற வகையிலோ பிரபல்யத்தை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுத்தாலும், ஒவ்வொரு அரசாங்கங்களும் வெளிநாடுகளிலும் பாதாள குழு உறுப்பினர்களை கைதுசெய்துள்ளன.நான் பொது மக்கள் அமைச்சராக இருந்தபோதும் வெளிநாடுகளிலுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம்.அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும் என்ற கருத்து பீல்ட் மார்சல் சரத் பொன்சேகவினால் வெளியிடப்பட்ட கருத்தாகும். அதேபோன்று, குணமுடைய தமிழ், சிங்கள, முஸ்லிம் என சகல மக்களும் நிராகரிக்கும் அறிவிப்பையே அவர் வெளியிட்டுள்ளார். எனவே, யுத்தத்தை வெற்றிக்கொள்வது அரசியல் வாதிகளே. யுத்தமொன்றின் வெற்றி மற்றும் தோல்வியின் பொறுப்பை அரசியல்வாதிகளே ஏற்பார்கள்.அவ்வாறெனில் இந்த யுத்தத்தை வெற்றிகொண்டதற்கான முழு கெளரவமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரித்தாக வேண்டும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது. அதற்காக மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று கூறமாட்டேம். அமைதியாக வாழக் கூடிய சூழலை உருவாக்கி கொடுத்து உலகின் பாரதூரமான பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement