இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் டொனல்ட் லூ, இலங்கை விஜயத்தின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறுகையில்,
“இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக விசேட உள்நாட்டு சமுத்திரவியல் ஆய்வுக்கு குழு ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு ஆய்வுக்குழுவை உருவாக்குவதன் மூலம் வேறு நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வரவேண்டிய தேவை ஏற்படாது.
குறித்த சமுத்திரவியல் ஆய்வுக் குழுவை உருவாக்கும்போது ஏற்படக்கூடிய பயிற்சிகளின் அவசியம் மற்றும் இதர தேவைகளின்போது அமெரிக்காவிடம் ஒத்துழைப்பு வழங்க துணைச் செயலாளர் டொனல்ட் லூ இணக்கம் தெரிவித்தார்.
ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையின் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஏற்கனவே கூறியுள்ளன.
உள்நாட்டு ஆய்வுக்குழு ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் இந்தியப் பெருங்கடல் தரவுகளை ஏனைய நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ள முடியும். எனக் குறிப்பிட்டார்.
இலங்கைக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுப்பதற்கு அமெரிக்கா உதவி. இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் டொனல்ட் லூ, இலங்கை விஜயத்தின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.இந்த சந்திப்பு தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறுகையில், “இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக விசேட உள்நாட்டு சமுத்திரவியல் ஆய்வுக்கு குழு ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறானதொரு ஆய்வுக்குழுவை உருவாக்குவதன் மூலம் வேறு நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வரவேண்டிய தேவை ஏற்படாது.குறித்த சமுத்திரவியல் ஆய்வுக் குழுவை உருவாக்கும்போது ஏற்படக்கூடிய பயிற்சிகளின் அவசியம் மற்றும் இதர தேவைகளின்போது அமெரிக்காவிடம் ஒத்துழைப்பு வழங்க துணைச் செயலாளர் டொனல்ட் லூ இணக்கம் தெரிவித்தார்.ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையின் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஏற்கனவே கூறியுள்ளன. உள்நாட்டு ஆய்வுக்குழு ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் இந்தியப் பெருங்கடல் தரவுகளை ஏனைய நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ள முடியும். எனக் குறிப்பிட்டார்.