• Mar 31 2025

தியாக தீபத்தை வழிபட்டு தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்புமனுத் தாக்கல்..!

Sharmi / Oct 9th 2024, 2:43 pm
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று(09)  காலை 11.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.

தமிழ் மக்கள் கூட்டணியானது இத் தேர்தலில் மான் சின்னத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத் தொகுதியில் களமிறங்குகின்றது.

அந்தவகையில், இன்று(09)  காலை வேட்புமனு தாக்கலுக்கு முன்னர்  வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடு நடத்தப்பட்டது.

இத் தேர்தலில் வேட்பாளர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் ஆகியோர் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபத்தை வழிபட்டு தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்புமனுத் தாக்கல். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று(09)  காலை 11.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.தமிழ் மக்கள் கூட்டணியானது இத் தேர்தலில் மான் சின்னத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத் தொகுதியில் களமிறங்குகின்றது.அந்தவகையில், இன்று(09)  காலை வேட்புமனு தாக்கலுக்கு முன்னர்  வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடு நடத்தப்பட்டது.இத் தேர்தலில் வேட்பாளர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் ஆகியோர் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement