• Jan 16 2026

திருகோணமலையில் வெள்ளத்தினால் அழிவடைந்த வேளாண்மைகள் - கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கள ஆய்வு !

dileesiya / Dec 10th 2025, 1:53 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் -உல்லைக்குளம் வெளியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மைகளை நேரடியாக கள ஆய்வு செய்யும் நடவடிக்கை இன்று (10) முன்னெடுக்கப்பட்டது. 

மாவிலாறு அணைக்கட்டு வெடிப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் வேளாண்மைகள் நீரில் மூழ்கி அழிவடைந்திருந்தன.

இந்நிலையில் தோப்பூர் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்களினால் தோப்பூர் -உல்லைக்குளம் வெளியில் கள ஆய்வு செய்து அழிவடைந்த வேளாண்மைகளின் சேத விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மைகளுக்கான நஷ்ட ஈட்டினை அரசாங்கம் பெற்று தரும் என்கின்ற நம்பிக்கையில் விவசாயிகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  


திருகோணமலையில் வெள்ளத்தினால் அழிவடைந்த வேளாண்மைகள் - கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கள ஆய்வு திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் -உல்லைக்குளம் வெளியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மைகளை நேரடியாக கள ஆய்வு செய்யும் நடவடிக்கை இன்று (10) முன்னெடுக்கப்பட்டது. மாவிலாறு அணைக்கட்டு வெடிப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் வேளாண்மைகள் நீரில் மூழ்கி அழிவடைந்திருந்தன.இந்நிலையில் தோப்பூர் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்களினால் தோப்பூர் -உல்லைக்குளம் வெளியில் கள ஆய்வு செய்து அழிவடைந்த வேளாண்மைகளின் சேத விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மைகளுக்கான நஷ்ட ஈட்டினை அரசாங்கம் பெற்று தரும் என்கின்ற நம்பிக்கையில் விவசாயிகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement