• Nov 19 2024

பாகிஸ்தானில் தீவிரமடையும் காற்று மாசுபாடு : நவம்பர் 24 வரை கல்லூரிகள் விடுமுறை

Tharmini / Nov 16th 2024, 11:20 am
image

இந்தியாவின் டெல்லி மற்றும் வட மாநிலங்களில்  வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வட மாநிலங்கள் மட்டுமல்லாமல்  அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில் சாதனை பதிவாக, 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. 

காற்றின் தரம் மோசமடைந்து உள்ள சூழலில், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதன்படி, நாளை (17)வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், புகைமூட்டம் மற்றும் குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழல் நிலவுவதால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை விடுமுறை  நீடிக்கப்பட்டுள்ளது இதனால், அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் , இணையவழி மூலம் கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

எனினும், முர்ரீ மாவட்டத்திற்கு மட்டும் இதற்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக காற்று மாசுபாடு அதிகரித்திருந்த நிலையில் லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 03 நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் மாகாண அரசு நேற்று அமல்படுத்தியது.

இதன்படி, இன்றும் (16) நாளையும் (17) இந்த முழு ஊரடங்கு தொடரும்.

வருகிற திங்கட்கிழமை (18) முதல் 03 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அதன்படி டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் இயங்கும் என அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தீவிரமடையும் காற்று மாசுபாடு : நவம்பர் 24 வரை கல்லூரிகள் விடுமுறை இந்தியாவின் டெல்லி மற்றும் வட மாநிலங்களில்  வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்கள் மட்டுமல்லாமல்  அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில் சாதனை பதிவாக, 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. காற்றின் தரம் மோசமடைந்து உள்ள சூழலில், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்படி, நாளை (17)வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், புகைமூட்டம் மற்றும் குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழல் நிலவுவதால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை விடுமுறை  நீடிக்கப்பட்டுள்ளது இதனால், அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் , இணையவழி மூலம் கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும், முர்ரீ மாவட்டத்திற்கு மட்டும் இதற்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக காற்று மாசுபாடு அதிகரித்திருந்த நிலையில் லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 03 நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் மாகாண அரசு நேற்று அமல்படுத்தியது. இதன்படி, இன்றும் (16) நாளையும் (17) இந்த முழு ஊரடங்கு தொடரும். வருகிற திங்கட்கிழமை (18) முதல் 03 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் இயங்கும் என அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement