• Nov 19 2024

கிளிநொச்சியில் இ.போ.ச பேருந்து மீது மதுப் போத்தலால் தாக்குதல்...!

Sharmi / Jul 17th 2024, 10:01 am
image

கிளிநொச்சியில் அரச பேருந்து மீது  மதுபான போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(17)  இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய பேருந்து மீது இவ்வாறு தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தல் மூலம் பேருந்துக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர் பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மதுபான போத்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

சாரதி பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.

தனியார் பேருந்து குழுவினருடன் ஏற்பட்ட நேர பிரச்சினை காரணமாக இந்த செயல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கிளிநொச்சியில் இ.போ.ச பேருந்து மீது மதுப் போத்தலால் தாக்குதல். கிளிநொச்சியில் அரச பேருந்து மீது  மதுபான போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று(17)  இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய பேருந்து மீது இவ்வாறு தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தல் மூலம் பேருந்துக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலை மேற்கொண்ட நபர் பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் மதுபான போத்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார்.சாரதி பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.தனியார் பேருந்து குழுவினருடன் ஏற்பட்ட நேர பிரச்சினை காரணமாக இந்த செயல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement