• Nov 17 2024

பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் - தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி

Tharmini / Nov 13th 2024, 10:27 am
image

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக,

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், நுவரெலியா மாவட்ட அரச அதிபருமான நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்கான 08 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

நேற்றைய தினம் (12) ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. 

சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் ஏனைய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் இன்று (13) வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார் .

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 605,292, அதாவது நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியில் 347,646 பேரும் கொத்மலைத் தொகுதியில் 88,219 பேரும் ஹகுரன்கெத்த தொகுதியில் 78,437 பேரும் வலப்பனை தொகுதியில் 90,990 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்

இம்முறை தபால் மூலம் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 20,502 ஆகும்.

தேர்தல் கடமைகளுக்காக 10,000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 2,500 பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு அனர்த்த நிலைமையையும் எதிர்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை வாக்கெண்ணும் மத்திய நிலையமாக நு/காமினி மத்திய மகா வித்தியாலயமும் (தேசிய கல்லூரி ) நுவரெலியா மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் - தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், நுவரெலியா மாவட்ட அரச அதிபருமான நந்தன கலபட தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்திற்கான 08 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்நேற்றைய தினம் (12) ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் ஏனைய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் இன்று (13) வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார் .நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 605,292, அதாவது நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியில் 347,646 பேரும் கொத்மலைத் தொகுதியில் 88,219 பேரும் ஹகுரன்கெத்த தொகுதியில் 78,437 பேரும் வலப்பனை தொகுதியில் 90,990 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்இம்முறை தபால் மூலம் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 20,502 ஆகும்.தேர்தல் கடமைகளுக்காக 10,000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 2,500 பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு அனர்த்த நிலைமையையும் எதிர்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதேவேளை வாக்கெண்ணும் மத்திய நிலையமாக நு/காமினி மத்திய மகா வித்தியாலயமும் (தேசிய கல்லூரி ) நுவரெலியா மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement