• Mar 30 2025

பூநகரி பிரதேச சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்பு

Chithra / Mar 27th 2025, 3:56 pm
image


பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு ஏற்கும் பணி இன்று நண்பகல் நிறைவடைந்த நிலையில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்.  

அரச அதிபர் எஸ். முரளிதரன்  மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர்.

ஏழு அரசியல் கட்சியும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய உள்ளூர் அதிகார சபைகளுக்கு தேர்தல் நடைபெறுகின்ற திகதியான மே மாதம் ஆறாம் திகதியே பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலும் நடைபெறும் என தெரிவித்தனர்.


பூநகரி பிரதேச சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்பு பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு ஏற்கும் பணி இன்று நண்பகல் நிறைவடைந்த நிலையில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்.  அரச அதிபர் எஸ். முரளிதரன்  மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர்.ஏழு அரசியல் கட்சியும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.ஏனைய உள்ளூர் அதிகார சபைகளுக்கு தேர்தல் நடைபெறுகின்ற திகதியான மே மாதம் ஆறாம் திகதியே பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலும் நடைபெறும் என தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement