• Mar 10 2025

பெண்களின் அனைத்துப்போராட்டங்களும் அரசியலே! மகளிர் தினத்தில் பிரதமர் ஹரிணி அறைகூவல்!

Chithra / Mar 8th 2025, 12:18 pm
image


பெண்களின் அனைத்துப் போராட்டங்களும் அரசியல் தான் என மகளிர் தின விசேட உரையின் போது  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

எங்களுடைய அனைத்து போராட்டமும் அரசியலாக தான் இருக்கிறது. எங்களுடைய பாதுகாப்புக்காக செய்ய வேண்டிய போராட்டம், எங்களுடைய பொருளாதாரத்துக்காக செய்ய வேண்டிய போராட்டம், 

பொருட்களின் விலைகளுக்காக செய்யக்கூடிய போராட்டம், எங்களுடைய மகள்களை, பெண்களை பாதுகாப்பதற்கு நாங்கள் செய்யக்கூடிய போராட்டம், 

ஊனமுற்ற வலுவிழந்த ஒரு பெண்களை பாதுகாப்பதற்கு நாங்கள் செய்யக்கூடிய போராட்டம், அதேபோல ஏனைய பெண்களை, பணியிடங்களுக்கு செல்லக்கூடிய பெண்களை பாதுகாப்பதற்கு செய்யக்கூடிய  போராட்டம்,  அந்த அரசியல் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்காக செய்ய வேண்டிய விடயங்கள் இவை அனைத்தும் அரசியலாக இருக்கிறது.

பொது போக்குவரத்தில் நாங்கள் செல்வதற்கு செய்ய வேண்டிய போராட்டங்கள் அவையும் அரசியல் தான். அந்த அரசியல் விருப்புக்குள்ளால் நாங்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் போராட்டங்களை நிகழ்த்தி இருக்கின்றோம். அந்தப் போராட்டங்களுக்கு பெயர் இருக்கவில்லை. 

நாங்கள் அமைப்பு ஆக்கப்படவில்லை. நாங்கள் தனித்தனியாக இருந்து அவற்றை செய்தமைதான் எங்களுடைய வாழ்க்கையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

பெண்களின் அனைத்துப்போராட்டங்களும் அரசியலே மகளிர் தினத்தில் பிரதமர் ஹரிணி அறைகூவல் பெண்களின் அனைத்துப் போராட்டங்களும் அரசியல் தான் என மகளிர் தின விசேட உரையின் போது  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,எங்களுடைய அனைத்து போராட்டமும் அரசியலாக தான் இருக்கிறது. எங்களுடைய பாதுகாப்புக்காக செய்ய வேண்டிய போராட்டம், எங்களுடைய பொருளாதாரத்துக்காக செய்ய வேண்டிய போராட்டம், பொருட்களின் விலைகளுக்காக செய்யக்கூடிய போராட்டம், எங்களுடைய மகள்களை, பெண்களை பாதுகாப்பதற்கு நாங்கள் செய்யக்கூடிய போராட்டம், ஊனமுற்ற வலுவிழந்த ஒரு பெண்களை பாதுகாப்பதற்கு நாங்கள் செய்யக்கூடிய போராட்டம், அதேபோல ஏனைய பெண்களை, பணியிடங்களுக்கு செல்லக்கூடிய பெண்களை பாதுகாப்பதற்கு செய்யக்கூடிய  போராட்டம்,  அந்த அரசியல் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்காக செய்ய வேண்டிய விடயங்கள் இவை அனைத்தும் அரசியலாக இருக்கிறது.பொது போக்குவரத்தில் நாங்கள் செல்வதற்கு செய்ய வேண்டிய போராட்டங்கள் அவையும் அரசியல் தான். அந்த அரசியல் விருப்புக்குள்ளால் நாங்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் போராட்டங்களை நிகழ்த்தி இருக்கின்றோம். அந்தப் போராட்டங்களுக்கு பெயர் இருக்கவில்லை. நாங்கள் அமைப்பு ஆக்கப்படவில்லை. நாங்கள் தனித்தனியாக இருந்து அவற்றை செய்தமைதான் எங்களுடைய வாழ்க்கையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement