• Nov 01 2024

திமிங்கலங்களின் தோலில் இருந்து பெறப்பட்ட 50 மில்லியன் பெறுமதியான அம்பர் மீட்பு!

Tamil nila / Oct 30th 2024, 7:58 pm
image

Advertisement

இலங்கையைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்களின் தோலில் இருந்து பெறப்பட்ட அம்பர் கையிருப்பை 50 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்கள் எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் மேலும் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 17 கிலோ 234 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பிடிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திமிங்கலங்களின் தோலில் இருந்து பெறப்பட்ட 50 மில்லியன் பெறுமதியான அம்பர் மீட்பு இலங்கையைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்களின் தோலில் இருந்து பெறப்பட்ட அம்பர் கையிருப்பை 50 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்கள் எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் மேலும் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர்களிடம் இருந்து 17 கிலோ 234 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பிடிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement