• Mar 30 2025

வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்கு செலவிடக் கூடிய தொகை அறிவிப்பு - வெளியான வர்த்தமானி

Chithra / Mar 27th 2025, 12:24 pm
image


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 74 ரூபா முதல்  160 ரூபா வரை செலவிடலாம் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் 03 ஆம் பிரிவுக்கமைய, 2428/72 என்ற இலக்கம் கொண்ட இந்த வர்த்தமானி கடந்த 23 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.


வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்கு செலவிடக் கூடிய தொகை அறிவிப்பு - வெளியான வர்த்தமானி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 74 ரூபா முதல்  160 ரூபா வரை செலவிடலாம் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் 03 ஆம் பிரிவுக்கமைய, 2428/72 என்ற இலக்கம் கொண்ட இந்த வர்த்தமானி கடந்த 23 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement