• Mar 30 2025

கடமைகளை பொறுப்பேற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்..!

Sharmi / Mar 27th 2025, 11:51 am
image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று(27) பொறுப்பேற்றார்.

இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் பொறுப்பேற்றார்.

ஏற்கனவே கடமையாற்றிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த.டீ.சில்வா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெ.ஏ சந்திரசேன கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபராக  நியமிக்கப்பட்ட நிலையில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

ஜெ.ஏ சந்திரசேன இதற்கு முன்பு கழுத்துறை பொலிஸ் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




கடமைகளை பொறுப்பேற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று(27) பொறுப்பேற்றார்.இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் பொறுப்பேற்றார்.ஏற்கனவே கடமையாற்றிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த.டீ.சில்வா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெ.ஏ சந்திரசேன கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபராக  நியமிக்கப்பட்ட நிலையில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.ஜெ.ஏ சந்திரசேன இதற்கு முன்பு கழுத்துறை பொலிஸ் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement