• Dec 03 2024

மரம் வெட்டும்போது ஏற்பட்ட வாக்குவாதம்; அயல் வீட்டாரால் பெண் குத்திக் கொலை

Chithra / Oct 31st 2024, 10:46 am
image

 

குருநாகல் - வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை  மாலை இடம்பெற்றுள்ளது.

வாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், குறித்த  பெண்ணின் வீட்டிற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், இந்த பெண் அயல் வீட்டில் வசிக்கும் நபருடன் இணைந்து மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் நபர் இந்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த பெண் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் 66 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரம் வெட்டும்போது ஏற்பட்ட வாக்குவாதம்; அயல் வீட்டாரால் பெண் குத்திக் கொலை  குருநாகல் - வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தார்.இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை  மாலை இடம்பெற்றுள்ளது.வாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட பெண் அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த  பெண்ணின் வீட்டிற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், இந்த பெண் அயல் வீட்டில் வசிக்கும் நபருடன் இணைந்து மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.இதன்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் நபர் இந்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.காயமடைந்த பெண் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.இதனையடுத்து, சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் 66 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement