• Nov 25 2024

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரனை தேவை- செல்வராசா கஜேந்திரன் எம்.பி!

Tharun / May 16th 2024, 6:47 pm
image

சர்வதேச குற்றவியல் விசாரனை வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

மூதூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கைது செய்யப்பட்டவர்களின் நிலை தொடர்பில் இன்று (16) சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் செய்த சமர்ப்பணத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர் இந்த மாதம் தமிழர்களுக்கு வலி சுமந்த மாதமாகும்.

தமிழர்களை 15 வருட காலமாக ஏமாற்றி வரும் இந்த அரசு முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக அவர்களை நினைவு கூற விடாமல் தடுத்துள்ளது இந்த நிலையில் மூதூரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஐசிசிபி ஆர் தொடர்பான அறிக்கையை பொலிஸாரிடம் நீதிமன்றம் கோரியுள்ளது.

இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்து நீதிமன்ளில் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன். பொய்யான குற்றச் சாட்டை பொலிஸார் முன்வைத்து நீதிமன்றில் தடை உத்தரவை பெற்று நீதிமன்றை ஏமாற்றியுள்ளனர். தற்போது நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அவர்கள் உணவை ஆயுதமாக பயன்படுத்தி கஞ்சியை பச்சிளம் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர் இது போன்ற உள ஆற்றுப்படுத்தலுக்காக இதனை நினைவு கூறுகின்றனர் தமிழர்கள் இந்த மாதத்தில் களியாட்டங்களை தவிர்த்து உணர்வு பூர்வமாக நினைவேந்தலில் ஈடுபடுகின்ற வலி சுமந்த மாதமாக காணப்படுகிறது. 

உள்ளக பொறி முறை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஷ்டியை கொண்டு வரவேண்டும் என்பதுடன் தமிழ் தேச மக்கள் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரனை தேவை- செல்வராசா கஜேந்திரன் எம்.பி சர்வதேச குற்றவியல் விசாரனை வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.மூதூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கைது செய்யப்பட்டவர்களின் நிலை தொடர்பில் இன்று (16) சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் செய்த சமர்ப்பணத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர் இந்த மாதம் தமிழர்களுக்கு வலி சுமந்த மாதமாகும்.தமிழர்களை 15 வருட காலமாக ஏமாற்றி வரும் இந்த அரசு முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக அவர்களை நினைவு கூற விடாமல் தடுத்துள்ளது இந்த நிலையில் மூதூரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஐசிசிபி ஆர் தொடர்பான அறிக்கையை பொலிஸாரிடம் நீதிமன்றம் கோரியுள்ளது.இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்து நீதிமன்ளில் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன். பொய்யான குற்றச் சாட்டை பொலிஸார் முன்வைத்து நீதிமன்றில் தடை உத்தரவை பெற்று நீதிமன்றை ஏமாற்றியுள்ளனர். தற்போது நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அவர்கள் உணவை ஆயுதமாக பயன்படுத்தி கஞ்சியை பச்சிளம் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர் இது போன்ற உள ஆற்றுப்படுத்தலுக்காக இதனை நினைவு கூறுகின்றனர் தமிழர்கள் இந்த மாதத்தில் களியாட்டங்களை தவிர்த்து உணர்வு பூர்வமாக நினைவேந்தலில் ஈடுபடுகின்ற வலி சுமந்த மாதமாக காணப்படுகிறது. உள்ளக பொறி முறை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஷ்டியை கொண்டு வரவேண்டும் என்பதுடன் தமிழ் தேச மக்கள் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement