• Apr 03 2025

தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்! -கடும் எச்சரிக்கை விடுக்கிறார் ரூபன் பெருமாள்!

Tharun / May 16th 2024, 6:44 pm
image

தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக  வேண்டும் என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  உப செயலாளரும் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமாகிய ரூபன் பெருமாள் தெரிவித்தார்.


நூற்றுக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில்  அவர் மேலும் தெரிவிக்கையில், 


கடந்த வாரம் கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பர தோட்டத்தில் உதவி முகாமையாளர், பல உத்தியோகத்தர் உள்ளிட்ட காடையர்கள் தோட்ட தொழிலாளியாக தொழில் புரிந்த இளம் தம்பதியினரை குறித்த தோட்டத்தின் தோட்ட குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தி, ஒரு பெண் தொழிலாளியினை காயப்படுத்தும் வகையில் அத்துமீறி தாக்கிய தோட்ட நிர்வாகத்தின் அடாவடியினை எதிர்த்து, மலையக அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை ஒன்றிணைத்து மலையக சிவில் உரிமைகளுக்கான இயக்கம் இத்தினபுரி நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தோட்ட நிர்வாகங்களில் அடாவடித்தனத்தின் இறுதியாக குறித்த தும்பர தோட்ட சம்பவம் அமைய வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார் 


அத்துடன்  குறித்த சம்பவம் தொடர்பாக கிரியெல்ல பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பாக நடந்து கொள்ளாது, தோட்ட நிர்வாகத்திற்கு பக்க சார்பாக நடந்து கொண்டதாக தெரிவித்து, இதற்கு எதிராக நியாயமான முறையில் விசாரணைகள் மீள நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் மா அதிபருக்கு கையடிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக வந்த மக்கள் பேரணி இரத்தினபுரி தொழில் ஆணையாளருக்கும் இவ்விடயம் தொடர்பான பக்க சார்பற்ற விசாரணையினை நடத்தி, குறித்த உதவி தோட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


அதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டமை குறிப்பிப்பிடத்தக்கது 


இதேவேளை  மக்களின் பொது பிரச்சினைகளுக்கு அனைத்து அரசியல் அமைப்புகளை சார்ந்தவர்களும் ஒன்றிணைய முன்வந்தமையானது  விடயம் என ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.

தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும் -கடும் எச்சரிக்கை விடுக்கிறார் ரூபன் பெருமாள் தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக  வேண்டும் என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  உப செயலாளரும் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமாகிய ரூபன் பெருமாள் தெரிவித்தார்.நூற்றுக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில்  அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பர தோட்டத்தில் உதவி முகாமையாளர், பல உத்தியோகத்தர் உள்ளிட்ட காடையர்கள் தோட்ட தொழிலாளியாக தொழில் புரிந்த இளம் தம்பதியினரை குறித்த தோட்டத்தின் தோட்ட குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தி, ஒரு பெண் தொழிலாளியினை காயப்படுத்தும் வகையில் அத்துமீறி தாக்கிய தோட்ட நிர்வாகத்தின் அடாவடியினை எதிர்த்து, மலையக அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை ஒன்றிணைத்து மலையக சிவில் உரிமைகளுக்கான இயக்கம் இத்தினபுரி நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தோட்ட நிர்வாகங்களில் அடாவடித்தனத்தின் இறுதியாக குறித்த தும்பர தோட்ட சம்பவம் அமைய வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார் அத்துடன்  குறித்த சம்பவம் தொடர்பாக கிரியெல்ல பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பாக நடந்து கொள்ளாது, தோட்ட நிர்வாகத்திற்கு பக்க சார்பாக நடந்து கொண்டதாக தெரிவித்து, இதற்கு எதிராக நியாயமான முறையில் விசாரணைகள் மீள நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் மா அதிபருக்கு கையடிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக வந்த மக்கள் பேரணி இரத்தினபுரி தொழில் ஆணையாளருக்கும் இவ்விடயம் தொடர்பான பக்க சார்பற்ற விசாரணையினை நடத்தி, குறித்த உதவி தோட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டமை குறிப்பிப்பிடத்தக்கது இதேவேளை  மக்களின் பொது பிரச்சினைகளுக்கு அனைத்து அரசியல் அமைப்புகளை சார்ந்தவர்களும் ஒன்றிணைய முன்வந்தமையானது  விடயம் என ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement